Thursday, November 17, 2011

புனித இஸ்லாத்தை தழுவிய குடும்பம்


நுவரெலியாவைச் சேர்ந்த திருமணமான கோவிந்தசாமி திருச்செல்வி ஆகிய பெயருடையவரும் (வயது-38), அவரின் பிள்ளைகளான ஜெகதீஸ்வரன் நவநீதன் (வயது-13), ஜெகதீஸ்வரன் நிஷாந்தன் (வயது-11), ஜெகதீஸ்வரன் சசிதரன் (வயது-7), ஜெகதீஸ்வரன் துஷாரி (வயது-6) ஆகிய ஐவரும், தமது சுய விருப்பின் பேரில் 17.11.2010 அன்று எமது புதிய காத்தான்குடி ஜாமியுல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் புனித இஸ்லாத்தை உளமாற ஏற்று தழுவினர்.

அத்துடன் அன்று முதல் அவர்களது பெயர்களை கோவிந்தசாமி திருச்செல்வி எனும் பெயரை கோவிந்தசாமி கதீஜா எனவும், ஜெகதீஸ்வரன் நவநீதன் எனும் பெயரை ஜெகதீஸ்வரன் யாஸீர் எனவும், ஜெகதீஸ்வரன் நிஷாந்தன் எனும் பெயரை ஜெகதீஸ்வரன் ஜாபீர் எனவும், ஜெகதீஸ்வரன் சசிதரன் எனும் பெயரை ஜெகதீஸ்வரன் ஆஸீம் எனவும், ஜெகதீஸ்வரன் துஷாரி எனும் பெயரை ஜெகதீஸ்வரன் சுமையா எனவும் பெயர் மாற்றி சபையோர் முன்னிலையில் சூட்டப்பட்டனர்.

இவர்கள் புதிய காத்தான்குடி-05, விடுதி வீதி, 6ம் ஒழுங்கை எனும் முகவரியில் தற்காலிக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் எவ்வித வருமானமும் அற்ற நிலையில் அமைப்பினதும், பிறரின் சிறு உதவிகளுடனும் குடும்பத்தை நடாத்துகின்றனர். இவர்களின் இரு பிள்ளைகளான J.யாஸிர், J.ஜாபிர் ஆகிய இருவரும் மட்/அந்-நாசர் வித்தியாலயத்திலும், ஏனைய இரு பிள்ளைகளான J.ஆஸீம், J.சுமையா ஆகிய இருவரும் மட்/அன்வர் வித்தியாலயத்திலும் கல்வி பயில்கின்றனர்.

இவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலேயே வாழ்கையை நடாத்தி வருகிறார்கள். தற்போது இவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவிகளைக் கொண்டு வாழ்க்கை நடாத்துவது இயலாத காரியமாகவே இருக்கிறது. இவர்களது தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டியது எமது கடமையாகும். எனவே, இக் கட்டுரையை வாசிக்கும் சகோதர, சகோதரிகள் தங்களாலான உதவிகளை இவர்களுக்கு வழங்குவதோடு ஏனையவர்களிடமும் இது தொடர்பாக தெரிவித்து அவர்கள் மூலமும் உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment