Saturday, November 26, 2011
மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார்.
இஸ்லாத்தை பிற மக்களிடத்தில் சேர்ப்பதை உன்னத பணியாக கொண்டுள்ள நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ வார இதழான சமுதாய மக்கள் ரிப்போர்ட்டின் வடிவமைப்பாளர் R.மன்மதன்இன்று (22.04.2011) தன் வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவர் தனது பெயரை மூஸா என்று மாற்றிக் கொண்டார்.
இவர் நீண்டகாலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வார இதழ் உணர்வு பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விலகி, சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாத்தில் இணைந்தது பற்றி மூஸா [மதன்] அவர்கள் கூறும்போது,
''ஐந்தாண்டுகளாகவே இஸ்லாத்தில் இணையும் எண்ணம் எனக்குள் இருந்தாலும், மனைவி-மக்கள் சகிதமாக இஸ்லாத்தில் இணையவேண்டும் என்ற எண்ணத்தில் தள்ளிப் போட்டு வந்தேன். இன்றைக்கு நான் இஸ்லாத்தில் இணையவேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டான். இருந்தாலும் என் மனதில் ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியுடன் நான் இன்றைக்கு இஸ்லாத்தை தழுவி விட்டேன் அல்ஹம்துலில்லாஹ். எனது இந்த இஸ்லாமிய தழுவல் எனது மனைவிக்கு இன்னும் தெரியாது. எனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இஸ்லாத்தை தழுவிட பிரார்த்தியுங்கள் என்றார்.
மூஸாவின் செயல்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திடவும், அவரது ஆசைப்படி அவரது குடும்பத்தாரும் இஸ்லாத்தில் சங்கமித்திடவும் நாமும் பிரார்த்திப்போமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment