Saturday, November 26, 2011
தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!
அந்த வகையில் கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் நம்முடைய சேப்பாக்கம் கிளை செயலாளர் கலீல் ரஹ்மானை அணுகி
தான் ஆறு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவன் என்னுடைய குடும்பத்தினர் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.தற்போது எங்கள் குடும்பம் கடுமையான் கடன் மற்றும் வட்டியில் சிக்கிக் கொண்டுள்ளோம். எங்கள் குடும்பத்தின் மொத்த வருமானமும் வட்டிக்கே செல்கிறது. வட்டியில் இருந்து மீட்டால் அவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் ஈர்க்கப் படலாம் என்றார்.
கிளை நிர்வாகி கலீல் மாநில செயலாளர் செங்கிஸ் கானை அணுகி இதைக் கூறினார். உடனடியாக இதற்காக செங்கிஸ் கான் அழைப்பாளர் அமிருதீன், மற்றும் கலீல் ஆகியோர் கடன் காரர்களிடம் பேசி ஒருவருடைய கடனை இனி வட்டியின்றி மாதம் 5000 வீதம் செலுத்துவது என்றும் , மற்ற ஒருவரின் கடனை பாதியாக குறைத்து 50000 ரூபாயை கொள்கை சகோதரர்களின் உதவி மற்றும் ஜகாத் நிதியில் இருந்தும் செலுத்தி கடனில் இருந்து மீட்டனர்.
இதைக் கண்ட அந்த கிறிஸ்தவக் குடும்பம் உள்ளங்கள் ஈர்க்கப் பட்டு மாநிலத் தலைமையகத்தில் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்து கதிஜா , ஆயிஷா,
மர்யம் என தங்களின் பெயரை அபிடவுட் போட்டு மாற்றிக் கொண்டனர்.
அல்ஹம்து லில்லாஹ் ! ஜகாத்தை சரியான முறையில் அல்லா கூறியபடி
உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கு சரியான முறையில் பயன் படுத்தினால் இந்தியாவில் கடனிலும் வட்டியிலும் மூழ்கியுள்ள ஏராளமான முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாத்தின் பால் வென்று எடுக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment