Saturday, November 26, 2011

சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்




அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பிரபல விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (அல்ஹம்துல்லிலாஹ்)



இந்தியாவைச் பூர்வீகமாக கொண்ட இவர் சந்திரனுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தான் சந்திரனில் உலாவித் திரிந்தசமயம் பூமியை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்ததாகவும் அப்போது பூமி கடும் இருட்டாக தென்பட்டபோதும், மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு நகரங்கள் மாத்திரம் பிரகாசமாக தென்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பூமியிலிருந்து எந்தவிதமான அலைவரிசைகளும் சந்திரனுக்கு எட்டாத நிலையில் அதான் (பாங்கு) ஒலி சத்தத்தை மாத்திரம் தான் தெளிவாக கேட்டதாகவும் புனித இஸ்லாத்தை தழுவிக்கொண்டுள்ள சுனீதா வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் மாதத்தை அடைந்துள்ள உலகளாவிய முஸ்லிம்களுக்கு இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென நம்புகிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் இஸ்லாத்தின்பால் பொருந்திக்கொள்ளட்டும்..!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் உறவினர் இஸ்லாத்தை ஏற்றார்.


அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

நீண்ட நெடுங்காலமாக கிருஸ்துவ பாரம்பரியத்தை கொண்ட இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத் சமீபத்தில் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இதை அவரே அறிவித்துள்ளார்.

பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இவர். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாமிய மார்க்கத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமாக தன்னை அறிவித்துக் கொண்டார்.
உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.
சமீபத்தில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.

ஈரானில் வைத்து தான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன் என கூறும் 43 வயதாகும் பூத், இப்போது தான் தினசரி ஐந்து வேளை தொழுவதாகும், சில சமயம் மசூதிக்கும் போவதாகும் கடந்த 45 நாட்களாக ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனது தலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத். எதிர்காலத்தில் புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம். குரானை தினசரி படிக்கிறாராம்.
தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் பூத், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.

பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும், டோனி பிளேரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில் உறுப்பினராக இருந்தவர்தான். அதன் பின்னர்தான் அவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பூத், மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாக கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷியா கொள்கையினை கொண்ட ஈரானின் தொடர்புகள் மூலம் இஸ்லாத்தை ஏற்ற லாரன்ஸ் பூத், மிக விரைவில் இஸ்லாத்தின் உண்மையான விஷயங்களை அறிந்து மார்க்க பிரச்சாராக மாறுவார் என பிரார்த்திப்போம்.

இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்


அல்லாஹ்வின் திருபெயரால்
இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வா அருகே வசிப்பவர் ராமு
இவரது மகன் சகோதரர் மருது பாண்டி இவர் நமது பள்ளியில்
சொல்லபடும் பயான்களை கேட்டும் அதன் விளக்கத்தை தமது
பள்ளி தோழர்களிடமும் கேட்டு தெளிவடைந்து மறுமையின்
பயம் காரணமாக நம் பள்ளிக்கு தொழ வர ஆரம்பித்தார் புது
முகமாக இருக்கும் காரணத்தால் நமது தாயீ அவரை விசாரிக்க
அவர் மறுமையின் பயம் காரணமாக தான் முஸ்லிம் ஆகிவிட்டதாக
சொல்ல அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான விவரங்களை கூறி
நன்றக யோசிக்கும்படியும் கூறி அனுப்பிவைத்தார் அவர் தமது
குடும்பத்தாரிடம் நான் முஸ்லிம் ஆக போகிறேன் என்று கூற
அடி உதை பலநாட்கள் பட்டினி என்று கொடுமை தொடர்ந்த போதிலும்
அவரின் உள்ளம் இறைவன் பக்கம் உறுதியாக நின்றது விளைவு
(மருது பாண்டி) இன்று முஹம்மத் அர்சத்ஆக இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ் ..
அல்லாஹ் யாருக்கு நேர் வழிகாட்டுகிறானோ
அவரை வழிகெடுப்பவன்( யாரும்) இல்லை 39 /37
பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு
மறுமையை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல்
மனோ இச்சையை பின்பற்றி கொண்டிருப்பவர்கள் மத்தியில்
முஹம்மத் அர்சத்திற்கு மறுமை வாழ்வு வடிவில் இஸ்லாம்
அவரை அனைத்துகொண்டது அவரையும் நம்மையும்
முஸ்லிம்களாக வாழ செய்து முஸ்லிம்களாக மரணிக்க செய்ய
அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்
நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகிற விதத்தில்
அஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள் 3 /102

வானியம்பாடி இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருவர் இஸ்லாத்தை ஏற்றனர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளையில் கடந்த 26-6-2011 அன்று நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சுளா மற்றும் வினோதினி ஆகிய இரண்டு சகோதரிகளும் கடந்த 8-7-2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்


நமது கிழக்கரை வடக்குத் தெருவை சார்ந்த காலி தாஸ் என்ற சகோதரர் ஏகத்துவ ஒளி பட்டு 04-2-2011 அன்று தம் வாயாலும் மனதாலும் கலிமாவை மொழிந்து அதன் அர்த்தம் விளங்கி இஸ்லாத்தை ஏற்றார். அவருக்கு அப்துல் ரஹ்மான் என்று பெயர் சூட்டப்பட்டது அல்ஹம்துலில்லா

மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார்.


இஸ்லாத்தை பிற மக்களிடத்தில் சேர்ப்பதை உன்னத பணியாக கொண்டுள்ள நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ வார இதழான சமுதாய மக்கள் ரிப்போர்ட்டின் வடிவமைப்பாளர் R.மன்மதன்இன்று (22.04.2011) தன் வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவர் தனது பெயரை மூஸா என்று மாற்றிக் கொண்டார்.


இவர் நீண்டகாலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வார இதழ் உணர்வு பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விலகி, சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாத்தில் இணைந்தது பற்றி மூஸா [மதன்] அவர்கள் கூறும்போது,

''ஐந்தாண்டுகளாகவே இஸ்லாத்தில் இணையும் எண்ணம் எனக்குள் இருந்தாலும், மனைவி-மக்கள் சகிதமாக இஸ்லாத்தில் இணையவேண்டும் என்ற எண்ணத்தில் தள்ளிப் போட்டு வந்தேன். இன்றைக்கு நான் இஸ்லாத்தில் இணையவேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டான். இருந்தாலும் என் மனதில் ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியுடன் நான் இன்றைக்கு இஸ்லாத்தை தழுவி விட்டேன் அல்ஹம்துலில்லாஹ். எனது இந்த இஸ்லாமிய தழுவல் எனது மனைவிக்கு இன்னும் தெரியாது. எனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இஸ்லாத்தை தழுவிட பிரார்த்தியுங்கள் என்றார்.

மூஸாவின் செயல்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திடவும், அவரது ஆசைப்படி அவரது குடும்பத்தாரும் இஸ்லாத்தில் சங்கமித்திடவும் நாமும் பிரார்த்திப்போமே

இஸ்லாத்தை ஏற்றார்


இஸ்லாத்தை ஏற்றார் :


அதே வெள்ளி கிழமை ஜும்மா தொழுகை முடிந்த பிறகு ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர் . சுபாஸ் சந்திர போஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் .

இவருக்கு TNTJ மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி கலிமாவை சொல்லிக் கொடுத்தார் .
அல்ஹம்துலில்லாஹ் .


இஸ்லாத்தை ஏற்ற இந்த சகோதரனுக்கு மறுமை வாழ்வு சிறப்பாக அமையவும் , கொள்கையில் உறுதியாக நிற்கவும் . அணைத்து சகோதரர்களும் துவா செய்யுங்கள் .


2. அதே கல்லூரியை சேர்ந்த கந்தவேலு என்ற சகோதரர் இஸ்லாத்தை முன்பே ஏற்று கொண்டாலும் . மக்கள் முன்பு தம்மை முஸ்லிம் என்று பிற கடனம் செய்தார்.


அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .

11.11.11 ஜும்மாவிற்க்குப் பின் இஸ்லாத்தை ஏற்ற


குமாரகுருவாக இருந்து இன்று 11.11.11 ஜும்மாவிற்க்குப் பின் இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் உமர் எனும் சகோதரருக்கு கலிமா சொல்லிக் கொடுத்த செங்கிஸ் கான்

தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!



அந்த வகையில் கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் நம்முடைய சேப்பாக்கம் கிளை செயலாளர் கலீல் ரஹ்மானை அணுகி
தான் ஆறு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவன் என்னுடைய குடும்பத்தினர் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.தற்போது எங்கள் குடும்பம் கடுமையான் கடன் மற்றும் வட்டியில் சிக்கிக் கொண்டுள்ளோம். எங்கள் குடும்பத்தின் மொத்த வருமானமும் வட்டிக்கே செல்கிறது. வட்டியில் இருந்து மீட்டால் அவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் ஈர்க்கப் படலாம் என்றார்.


கிளை நிர்வாகி கலீல் மாநில செயலாளர் செங்கிஸ் கானை அணுகி இதைக் கூறினார். உடனடியாக இதற்காக செங்கிஸ் கான் அழைப்பாளர் அமிருதீன், மற்றும் கலீல் ஆகியோர் கடன் காரர்களிடம் பேசி ஒருவருடைய கடனை இனி வட்டியின்றி மாதம் 5000 வீதம் செலுத்துவது என்றும் , மற்ற ஒருவரின் கடனை பாதியாக குறைத்து 50000 ரூபாயை கொள்கை சகோதரர்களின் உதவி மற்றும் ஜகாத் நிதியில் இருந்தும் செலுத்தி கடனில் இருந்து மீட்டனர்.

இதைக் கண்ட அந்த கிறிஸ்தவக் குடும்பம் உள்ளங்கள் ஈர்க்கப் பட்டு மாநிலத் தலைமையகத்தில் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்து கதிஜா , ஆயிஷா,
மர்யம் என தங்களின் பெயரை அபிடவுட் போட்டு மாற்றிக் கொண்டனர்.

அல்ஹம்து லில்லாஹ் ! ஜகாத்தை சரியான முறையில் அல்லா கூறியபடி
உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கு சரியான முறையில் பயன் படுத்தினால் இந்தியாவில் கடனிலும் வட்டியிலும் மூழ்கியுள்ள ஏராளமான முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாத்தின் பால் வென்று எடுக்கலாம்.

இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி !


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் போராட்டமானாலும், பொதுக் கூட்டமானாலும், ,ஜும்மாவனாலும் அதில் முஸ்லிமல்லதோர் இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்ச்சி நடப்பது வாடிக்கை ஆகி விட்டது .அல்ஹம்து லில்லாஹ்! கோவை மர்கசில் நடை பெற்ற ஜும்மா தொழுகைக்குப் பின் இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு
எஸ்.எம்.பாக்கர் கலிமா சொல்லிக் கொடுத்த காட்சி.

Friday, November 18, 2011

புனித ரமழானை முன்னிட்டு கைத்தான் கிளையில் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட நிகழ்வின்போது



புனித ரமழானை முன்னிட்டு கைத்தான் கிளையில் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட நிகழ்வின்போது பிடிக்கப்பட்ட புகைப்படம். இதில் கைத்தான் கிளை , தலைமையகம் மற்றும் கபத் கிளைகளை சார்ந்த சகோதரர் ஜாபிர் சகோதரர் அமீர் சகோதரர் ரொசான் உட்பட மற்றும் இஸ்லாத்தை தழுவிய 40 சகோதரர்கள் கலந்து கொண்டனர்

இஸ்லாத்தை தழுவியவருக்கு வாழ்வாதார உதவி.


இஸ்லாத்தை தழுவியவர்களுக்கான மார்க்க நிகழ்சிகள் மற்றும் வாழ்வாதாரா உதவிகள் வழங்குவதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் உருவாக்கப்பட்ட என்ற பிரிவின் மூலமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஒருவரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

பிரான்சு நாட்டில் இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு பதறிப்போன அதிபர் சர்கோசி


உடலை மூடி இருக்கும் நீச்சல் உடைக்கு பிரான்ஸ் நீச்சல் தடாகத்தில் தடை:

பிரான்ஸ் நாட்டில் இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு பதறிப்போன சர்கோசி பெண்கள் இஸ்லாமிய உடை அணிவது பெண்ணடிமைத்தனத்தை காட்டுவதாக கூறினார் அது சர்ச்சையானது. இப்போது முஸ்லிம் பெண்கள் அணியும் `பர்க்கினி’ Burkini நீச்சல் உடை மீது சர்ச்சையை கிளப்பி உள்ளனர் . பர்க்கினி என்பது முஸ்லிம் பெண்கள் முழுவதும் உடலை மறைத்து கொண்டு நீந்துவதற்கு அணியும் நீச்சல் உடை ஆகும். இந்த உடையை அணிந்துகொண்டு ஒரு முஸ்லிம் பெண் கரோல் என்ற இஸ்லாத்தை தழுவிய பிரான்ஸ் பெண் ஒரு நீச்சல் குளத்துக்கு சென்றபோது அங்கு இருந்த ஊழியர் அவர் நுழைவதற்கு தடை விதித்தார் இதற்கான அடிப்படை காரணம் இஸ்லாம் மிக வேகமாக வளரும் கண்டமாக ஐரோப்பாவும் இஸ்லாம் மிக வேகமாக வளரும் நாடு பிரான்சுமாகும்.


பர்கா உடை பிரான்ஸ் நாட்டில் வரவேற்கத்தக்கது அல்ல’ என்று அதிபர் சர்கோசி கூறியதை தொடர்ந்து, அந்த உடைக்கு தடை விதிக்கலாமா? என்பது பற்றி கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் பர்க்கினி’ உடை அணிந்து கொண்டு ஒரு பெண் பாரிஸ் நகரில் உள்ள எமெரய்ன்வில்லே என்ற இடத்தில் உள்ள ஒரு நீச்சல் குளத்துக்கு சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முழுவதும் உடை அணிந்து நீந்தக்கூடாது என்று அனுமதி மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து கரோல் என்ற இஸ்லாத்தை தழுவிய பிரான்ச் பெண் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக கூறி இருக்கிறார்

மயிலாடுதுறையில் இஸ்லாத்தை தழுவிய தணிகைவாணன்


நாகை வடக்கு மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த 21 வயது ஆன சகோதரர் தணிகைவாணன் அவர்கள் கடந்த 25.08.2010,அன்று மயிலாடுதுறை தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை தழுவினார்கள். தனது பெயரை அக்ரம்வசித் என மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!


உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.



தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.



அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்.




இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.
அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.

இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர்


இஸ்லாம் தனிமனிதச் சொத்தல்ல

அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர் முஹம்மது நசீர் அவர்கள், தான் இஸ்லாத்தில் இணைந்த இனிய செய்தியை நமது சிற்றிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


இலங்கையின் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்துவரும் கிருஸ்துவ மதத்தில் நல்ல ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த நான், விவரமறிந்த நாள் முதல் அம்மதத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கடவுள் பக்தியுடனும் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்து, சரிந்து விட்டதால், வேலை தேடி வெளிநாடு செல்லும் நிர்பந்தம் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட போது, உலகின் பல நாடுகளும் இலங்கை குடி மக்கள் சென்று வந்தார்கள். நானும் வெளிநாடு சென்று வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முனைந்த போது, சவூதி அரபியாவிற்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது சவூதி வந்து சுமார் 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.




இங்கு வருவதற்கு முன்பு என் உள்ளத்தில் இனம் புரியாத அச்சம் நிறைந்திருந்தது. காரணம் நூற்றுக்கு நூறு சதவீதம் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டிற்கு செல்கிறேன். நான் ஒரு கிருஸ்துவன் என்பதால் இஸ்லாம் பற்றிய பல செய்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். அரபு நாட்டில் வாழ்ந்த கிருஸ்தவர்களை மதமாற்றம் செய்து விட்டார்கள், நம்மையும் அது போன்று மதம் மாறும் படி நிர்பந்தம் செய்வார்களோ, அவ்வாறு செய்தால் என்ன செய்வது, எவ்வாறு எனது மதக் கோட்பாட்டில் நிலைத்திருப்பது என்பன போன்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன. மேலும் நான் ஒரு மாற்றுமதத்தைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு என்ன வேலை கொடுப்பார்கள், நான் ஒரு பட்டதாரியாக இருப்பதால் அதற்கு தகுந்த வேலையினைத் தருவார்களா? அல்லது கடினமான வேலையைக் கொடுத்து அலட்சியம் செய்து விடுவார்களா? என்னை எவ்வாறு நடத்துவார்கள் போன்ற பயமும் என்னுள் இருந்தது.


ஆனால் இங்கு வந்த சில மாதங்களிலேயே உண்மை புரிய ஆரம்பித்துவிட்டது. நான் கற்பனை செய்து, பயந்து கொண்டிருந்தது போன்று எதுவும் நடை பெறவில்லை. இங்குள்ள சூழ்நிலைகளையும், மொழியினையும் நான் அறிந்து கொள்ளும் வரை, சாதாரண வேலையைக் கொடுத்திருந்தார்கள். இங்குள்ள சூழ்நிலைகளையும், மொழியினையும் ஒரளவு புரிந்து கொண்டப் பிறகு நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் அவசியப்படும் உணவுத் தேவையை நிர்ணயம் செய்யும் பிரிவுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். எனக்குக் கீழ் பல முஸ்லிம்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் முஸ்லிம் நோயாளிகளுக்கு தேவைப்படும் உணவினைத்தான் நிர்ணயம் செய்கிறேன். இதற்கு எனது மதம் எந்த விதத்திலும் ஒரு தடையாக இருந்ததில்லை. சுமார் ஏழு வருங்டகளுக்கு மேல் இதே நிலையில் இருந்து விட்டேன். மூன்று முறை விடுமுறையில் ஊர் சென்று வந்துள்ளேன். இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் நிர்பந்தம் செய்ய வில்லை. நான் மாற்று மதத்தைச் சார்ந்தவன் என்பதால் என்னுடன் யாரும் கடுமையும் காட்ட வில்லை.


எனினும் என்னுடன் இருந்த இஸ்லாமியச் சகோதரர்கள் குறிப்பாக இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் எனக்கு இஸ்லாத்தைப்பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் இடையிடையே கூறுவார்கள். நான் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் கூறுதவற்கு எந்தவித முக்கித்துவமும் கொடுக்கவில்லை. அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டாலும் அதற்காக வருத்தப்படவும் இல்லை, சடைந்து போகவும் இல்லை. அவர்கள் சில நேரங்களில் இஸ்லாமிய நூட்களையும் தங்களது செலவில் வாங்கிக் கொண்டுவந்து எனக்குக் கொடுப்பார்கள். யாரும் அறியாத விதத்தில் தனிமையில் அமர்ந்து இந்தப் புத்தகங்களில் என்னதான் உள்ளது என்று அறிந்து கொள்வதற்காக படிக்க ஆரம்பித்தேன்.


எனது கிருஸ்துவ மதம்தான் சரியானது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இது நாள் வரை வாழ்ந்துவிட்ட எனது வாழ்வில் இந்தப் புத்தகங்கள் சிறிய ஊசலாட்டத்தை ஏற்படுத்த ஆரம்பித்து, எனது கிருஸ்துவக் கொள்கையை ஆட்டம் காணச் செய்துவிட்டது. நான் இருக்கும் கிருஸ்துவக் கொள்கையை திரும்பிப்பார்க்க வேண்டும் என்ற சிந்தனையைத் தோற்றுவித்தது.


மேலும் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் என்னுள் ஏற்பட்டது. இதனை வெளிப்படையாக யாரிடமும் சொல்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த போது, என் சவூதி நண்பர்கள் இதனைக் குறிப்பால் உணர்ந்து, மேலும் நான் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்ள பல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, மென்மேலும் இஸ்லாம் பற்றி அறிவதற்கு ஊக்கம் அளித்தார்கள்.


இஸ்லாம் குறித்த பல நூட்களைப் படித்த நான், இஸ்லாம் போதிக்கும் அதன் தூய கொள்கையால் அதன் பால் ஈர்க்கப்பட்டேன். அதன் பெயரே ஒரு சிறப்பு வாய்ந்ததாக இருப்பதை அறிந்து கொண்டேன். காரணம் தற்போதுள்ள மதங்கள் அனைத்தும் ஒரு தனிப்பட்ட நபரின், அல்லது இயக்கத்தின், அல்லது நாட்டின் பெயரிலேயே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. கிருஸ்துவ மதம் என்பது ஏசு கிருஸ்து மதம் என்றே அழைக்கப்படுகிறது, அது போல், இலங்கையில் அதிக மக்களால் பின்பற்றப்படும் புத்த மதம் புத்தரின் பெயரால் துவக்கப்பட்டுள்ளது. இது போல்தான் அனைத்து மதங்களும். ஆனால், இஸ்லாம் என்பது எந்த தனிமனிதரின் பெயரையும் குறிக்கக் கூடியதல்ல.


தனிமனிதரின், தனி இயக்கத்தின், தனிநாட்டின் பெயர்களைக் கடந்து அனைவருக்கும், அனைத்து இயக்கத்தினருக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமானது, பொதுவானது, எங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாட அது ஒரு தனிமனிதச் சொத்துமல்ல என்று இன்றுவரை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இஸ்லாத்தை போதித்த தூதுவர்களில் இறுதியானவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் இந்த மதம் அவருக்கும் சொந்தமானதல்ல, இந்தத் தூதுவர்களை அனுப்பிய அல்லாஹ், உலக மக்கள் அனைவரையும் நேர் வழிப்படுத்த தந்த அருள் மிக்க மதம்தான் இஸ்லாம் என்பதைப்புரிந்து கொண்டேன்.


மற்ற எல்லா மதங்களைப் போல் அல்லாமல் கடவுள் கொள்கையில் சிறந்து விளங்கும் இஸ்லாம் மனித இயற்கையோடு ஒட்டிப்போகும் உயர்ந்த கோட்பாடுகளை கொண்டு விளங்குகிறது. பின்பற்றப் பட முடியாத வரட்டுத் தத்துவங்களை விட்டும் வெகுதூரத்தில் இருக்கிறது. எனவே, இந்த இஸ்லாம், மனிதனைப்படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த மார்க்கம் என்பதை உணர்வுப் பூர்வமாக புரிந்து, நம்மை செம்மைபடுத்திக் கொள்ள சிறந்த மார்க்கம் இது தான் என்பபைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் என் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்த போது, நான் பணி செய்யும் நிறுவனத்தில் என்னைப்போன்றே இஸ்லாமியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தைத் தழுவிய இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற ஊரைச் சார்ந்த சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் வந்து மனப்பூர்வமாக இந்த புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.


அல்ஹம்து லில்லாஹ். (எனக்கு நேர் வழிகாட்டிய அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும் உண்டாகட்டும்.) நான் நேர் வழி பெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நற்கூலிகள் நிறைய வழங்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

Thursday, November 17, 2011

29-04-2011அன்று கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
அல்லாஹுவின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால்,

29-04-2011 அன்று கத்தர் QITC மர்கசில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது விழுப்புரம் மாவட்டம் திருவண்ணாமலைபேட்டையை சேர்ந்த 'காசி' என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவினார்.
அவருக்கு,QITC உறுப்பினர்கள் சகோதரர்கள் .ஈசா,சலீம்பாஷா,அஜ்மீர் அலீ ஆகியோர் இஸ்லாத்தை எத்தி வைத்தனர்.அவர்களுக்கு ,அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!
அச்சகோதரரை QITC தலைவர் டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.அச்சகோதரருக்கு சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் கலிமா சொல்லிகொடுத்தார்கள்.

தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு 'காசிம்' என்று பெயர் சூட்டிக்கொண்டார் . அல்ஹம்துலில்லாஹ்!


அவருக்கு QITC அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள் மார்க்க விளக்க புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள் வழங்கினார்கள்

இஸ்லாத்தை தழுவிய சேர்மராஜ்


அபுதாபியில் டெக்னீஷியனாக பணியாற்றும் தூத்துக்குடியைச் சார்ந்த சேர்மராஜ் என்ற சகோதரர் துபாயில் 03.09.2010 அன்று நடைபெற்ற தமுமுக-வின் அமீரக பொதுக் குழுவில் கலந்துக் கொண்டு இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு குணங்குடி அமீர் சுல்தான் கலிமா சொல்லிக் கொடுத்து அப்துல்லாஹ் என்ற அவரது புதிய பெயரையும் அறிவித்தார். மமக-வின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து மேற்கொண்டு அவருக்கு தேவையான கடவுச் சீட்டில் சட்டரீதியான பெயர் மாற்றம் உட்பட்ட உதவிகளை தமுமுக செய்யும் என அறிவித்தனர்.

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

பெங்களூரில் இஸ்லாத்தை தழுவிய எட்வின்!


கடந்த வெள்ளி 05.032010 அன்று கர்நாடக பகுதி TNTJ தாவா மையத்தில் பெங்களுரு டேன்னரி ரோடு பகுதியை சேர்ந்த சகோதரர்:எட்வின் அவர்கள் தூய இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். நீண்ட நாட்களாகவே இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்டு வந்த இவர் தற்பொழுது ஏக இறைவனின் மார்கத்தை தழுவியுள்ளார்- அல்ஹம்துலில்லாஹ்!!

இவர் தமது பெயரை யஹ்யா என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு சகோதரர் PJ அவர்கள் மொழி பெயர்த்துள்ள திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

தஞ்சை வடக்கில் இஸ்லாத்தை தழுவிய பீனா.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் 17.06.11 வெள்ளிக்கிழமை அன்று பீனா என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை பினா என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை தழுவிய செந்தில்குமார்


செந்தில்குமார் என்ற சகோதரர் மன்னார்குடி சோங்குளத்தை சார்ந்தவர் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார் 21-10-2011 வெள்ளி ஜும்ஆ தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் TNTJ-நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் இவருக்கு கலிமா சொல்லி கொடுக்கப்பட்டு இஸ்லாமிய அடிபடை கல்வி புத்தகம் வழங்கப்பட்டது.இவரின் (செந்தில்குமாரின்) மூத்த சகோதரர் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய சந்தானம்


கடந்த 10-06-10 அன்று வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் .

இவருக்கு சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் ஏகத்துவ கலிமாவை கற்றுக் கொடுத்தார்கள். பிறது தனது பெயரை அப்துல்லாஹ்( இறைவனின் அடிமை ) என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

புனித இஸ்லாத்தை தழுவிய குடும்பம்


நுவரெலியாவைச் சேர்ந்த திருமணமான கோவிந்தசாமி திருச்செல்வி ஆகிய பெயருடையவரும் (வயது-38), அவரின் பிள்ளைகளான ஜெகதீஸ்வரன் நவநீதன் (வயது-13), ஜெகதீஸ்வரன் நிஷாந்தன் (வயது-11), ஜெகதீஸ்வரன் சசிதரன் (வயது-7), ஜெகதீஸ்வரன் துஷாரி (வயது-6) ஆகிய ஐவரும், தமது சுய விருப்பின் பேரில் 17.11.2010 அன்று எமது புதிய காத்தான்குடி ஜாமியுல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் புனித இஸ்லாத்தை உளமாற ஏற்று தழுவினர்.

அத்துடன் அன்று முதல் அவர்களது பெயர்களை கோவிந்தசாமி திருச்செல்வி எனும் பெயரை கோவிந்தசாமி கதீஜா எனவும், ஜெகதீஸ்வரன் நவநீதன் எனும் பெயரை ஜெகதீஸ்வரன் யாஸீர் எனவும், ஜெகதீஸ்வரன் நிஷாந்தன் எனும் பெயரை ஜெகதீஸ்வரன் ஜாபீர் எனவும், ஜெகதீஸ்வரன் சசிதரன் எனும் பெயரை ஜெகதீஸ்வரன் ஆஸீம் எனவும், ஜெகதீஸ்வரன் துஷாரி எனும் பெயரை ஜெகதீஸ்வரன் சுமையா எனவும் பெயர் மாற்றி சபையோர் முன்னிலையில் சூட்டப்பட்டனர்.

இவர்கள் புதிய காத்தான்குடி-05, விடுதி வீதி, 6ம் ஒழுங்கை எனும் முகவரியில் தற்காலிக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் எவ்வித வருமானமும் அற்ற நிலையில் அமைப்பினதும், பிறரின் சிறு உதவிகளுடனும் குடும்பத்தை நடாத்துகின்றனர். இவர்களின் இரு பிள்ளைகளான J.யாஸிர், J.ஜாபிர் ஆகிய இருவரும் மட்/அந்-நாசர் வித்தியாலயத்திலும், ஏனைய இரு பிள்ளைகளான J.ஆஸீம், J.சுமையா ஆகிய இருவரும் மட்/அன்வர் வித்தியாலயத்திலும் கல்வி பயில்கின்றனர்.

இவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலேயே வாழ்கையை நடாத்தி வருகிறார்கள். தற்போது இவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவிகளைக் கொண்டு வாழ்க்கை நடாத்துவது இயலாத காரியமாகவே இருக்கிறது. இவர்களது தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டியது எமது கடமையாகும். எனவே, இக் கட்டுரையை வாசிக்கும் சகோதர, சகோதரிகள் தங்களாலான உதவிகளை இவர்களுக்கு வழங்குவதோடு ஏனையவர்களிடமும் இது தொடர்பாக தெரிவித்து அவர்கள் மூலமும் உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

அல்லாஹு அக்பர் கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ராஜா அல்லாஹு அக்பர்


அல்லாஹு அக்பர் கடநத் 23-06-2010 வெள்ளிக்கிழமை அன்று நடந்த பேச்சு பயிற்சி முகாமில் , விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுமதசகோதரர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளக்கி கூறி , கலிமா சொல்லிகொடுத்தார் .

தன்னுடைய பெயரை ராஜா முஹம்மதுஎன்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” கடவுளை வணங்கும் முறை தன்னுள்ளத்தை ஈர்த்ததாக கூறினார் .

அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள்.அல்லாஹு அக்பர்.

துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய கிருஷ்ணன்


கடந்த 17.07.2009 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் துபை ஜே.டி. மர்கஸில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கான தர்பியா நிகழ்ச்சியின் போது, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகோ.முத்துகிருஷ்ணன் என்பவர் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முன் வந்து, ஜே.டி. நிர்வாகிகள் முன்னிலையில் அமீரக பேச்சாளர் சகோ. பேரணாம்பட் ஜாகிர் அவர்கள் அச்சகோதரருக்கு ஷஹாதா கலிமாசொல்லிக் கொடுக்க ஷஹாதத் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

மேலும் தன்னுடைய பெயரை முத்து ஃபரீத் எனவும் சூட்டிக் கொண்டார். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

இஸ்லாத்தை தழுவிய கிருத்துவ சகோதரர்


நமது பகுதியைச் சேர்ந்த ஜான் என்கிற கிருத்துவ சகோதரர் நமது கிளை மர்கஸில் வைத்து இஸ்லாத்தை தழுவினார். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்தில் இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்துவ குடும்பம்


கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்தில் இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்துவ குடும்பம்
அவர்கள் அனைவரும் அடிப்படை இஸ்லாத்தை தெரிந்து கொள்ள ஏற்பாடு!
புகைப்படங்களுடன் செய்தி...கடந்த 05-01- 2007 அன்று பெங்களூரில் கிருத்துவ மதத்தைச் சேர்ந்த சகோதரர் அருன், அவரது மனைவி நளினி மற்றும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளுடன் கர்நாடக தவ்ஹித் ஜமாத் நடத்தும் இஸ்லாமிக் தஃவா மையத்தை அணுகி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்ததின் அடிப்படையில் . அவர்கள் ஐந்து பேரும் சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் தங்களை இனைத்துக் கொண்டனர்.

துபை TNTJ யின் தஃவா பணியும்! இஸ்லாத்திற்கு மாறும் மாற்றுமத சகோதரர்


அல்லாஹ்வின் மார்க்கத்தில் அலை அலையாய் மக்கள் இணையும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நாள்தோறும் பெருகி வருவதன் தொடரில் ஒன்றாய் கடந்த 13.07.07 வெள்ளியன்று JT மர்கஸில், துபையில் பணியாற்றும் இலங்கை கட்டுநாயக பகுதியை சேர்ந்த, புத்த மத தாய்க்கும் கிருஸ்தவ மத தந்தைக்கும் பிறந்த ''சுரங்கா' என்ற சிங்கள சகோதரர் இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தில் முஹம்மது ரிஸான் என்ற பெயரோடு தன்னை இணைத்துக் கொண்டார், அல்ஹம்துலில்லாஹ்.

எத்தனையோ இயக்கங்கள் இருக்க தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதன் வெளிப்பாடே கடந்த 4 வாரங்களில் JT மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற 3 வது சகோதரர் இவர் என்ற நிஜம்.
பிறந்து வளர்ந்த மதங்களை துறந்து, குர்ஆன் ஹதீஸை விளங்கி மார்க்கத்தை ஏற்கும் இம்மக்களிடமிருந்து இஸ்லாத்திற்குள்ளேயே தன்னை மாற்றிக் கொள்ள மறுக்கும் மத்ஹபு மற்றும் தர்காவாதிகள் பாடம் கற்க வேண்டும் என்ற இலங்கை மவ்லவி.
முஹம்மது நாசர் அவர்களின் கூற்று இந்நிகழ்வின் சிந்திக்கத் தூண்டும் சிறப்பம்சங்களில் ஒன்றாய் அமைந்தது.

துபை TNTJ மர்கசில் இஸ்லாத்தை தழுவிய மாற்றுமத சகோதரர்!

துபை TNTJ மர்கசில் கடந்த 30.6.2007 அன்று சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை அப்துர் ரஹீம் என மாற்றிக் கொண்டார். இவருக்கு துபை TNTJ சார்பாக இலவசமாக குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு தினசரி இஸ்லாமிய வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் சட்ட உதவிகள் கத்தனா செய்வது போன்றவைகள் இலவசமாக இவருக்கு செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாராத்திற்கு முன்பு ஒரு மாற்றுமத சகோதரர் துபை TNTJ மர்கசில் இஸ்லாத்தை தவழுவியது குறிப்பிடதக்கது.

புரைதா கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய முருகன்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 28.08.2009 அன்று வ.n.வ.த.மண்டல தலைமை அலுவலகத்தில்
‘சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி’ நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மௌலவி அஸதுல்லா ஜமாலி அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக காரைக்கால் நிரவியைச்சேர்ந்த திருமுருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார்.

முருகன் என்ற தன்பெயரை முஹம்மது ரியாஸ் என்று மாற்றிக்கொண்டார். நிகழ்ச்சிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் அல்கஸீம் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட இரண்டாம் ஆண்டு ரமலான் சிறப்பு மலர் புத்தகமும், ஃபித்ரா பற்றிய பிரசுரமும் இலவசமாக வழங்கப்பட்டது.

குவைத் ஹதியா கிளையில் இஸ்லாத்தை தழுவிய சுந்தர் ராஜ்


21-08-2009 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹதியா கிளையில் திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்களம் 51-மனக்கரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்ற சகோதரர் அமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார் அல்லாஹு அக்பர்.

Tuesday, November 15, 2011

தபூக் கிளையில் சகோ.திவாகரன் இஸ்லாத்தை ஏற்றார்


தபூக் கிளையில் சகோ.திவாகரன் இஸ்லாத்தை ஏற்றார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 3-11-2011 அன்று தபூக் ஆஸ்ட்ரா விவசாய பண்னையில் பணிபுரிந்துவரும் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் குருநகரை சேர்ந்த சகோ.திவாகரன் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார்க்ள. கிளையின் சார்பில் அவருக்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

Friday, November 11, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்



அஸ்ஸலாமு அலைக்கும், நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.


ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.



இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.


மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.




தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.


மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர்.


2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு


அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன்,மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார்.அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும்,இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திப்போம்.

ரியாதில் இஸ்லாத்தில் இணைந்தவருக்கு புத்தகங்கள்


இஸ்லாத்தை ஏற்றவர்கள் அதை ழுழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு தேவையான புத்தகங்கள், ஆடியோ கேஸட்டுகள், ஆடியோ, வீடியோ சிடிக்கள், டிவிடிக்கள் போன்றவற்றை ரியாத் மண்டலம் இலவசமாக வழங்கி வருகிறது.

கடந்த வாரத்தில் இஸ்லாத்தை ஏற்ற இருவருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன. அது போலவே இந்த வாரம் இலங்கையை சேர்ந்த ஜே.பி.ஜூட் என்ற கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது ரிஸ்வான் என தனது பெயரை மாற்றிக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு கடந்த 21-01-11 அன்று சிடி, டிவிடிக்கள் வழங்கப்பட்டன.

ரியாத் டி.என்.டி.ஜேயின் துணை செயலாளர் சகோ. யூனுஸ் அவர்கள் அதை வழங்கினார்.

நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை பூஜாலாமா, இஸ்லாத்தை


28 வயதுடைய
நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை பூஜாலாமா, இஸ்லாத்தை படித்த பிறகு அதில்
ஈர்க்கப்பட்டு, இதுநாள் வரை தான் செய்ததெல்லாம் தவறு என்று உணர்ந்து
நடிப்பதையும்,மாடல் செய்வதையும்,மியூசிக் ஆல்பம் தயாரித்து வெளியிடுவதையும்
விட்டுவிடார். இஸ்லாத்தை ஏற்ற அவர் இப்போது உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா
அணிந்து வெளியே வருகிறார்.


புத்த மதத்தைச் சேர்ந்த, மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அப்பெண்மனி
தனது கடந்த கால வாழ்வு பற்றி..... நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன். தற்கொலை
செய்து கொள்ளவும் முயன்றேன். இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. நான்
இப்பொழுது ஆபாசம், மது, புகை, அசுத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும்
விட்டுவிட்டேன். இஸ்லாத்தை பற்றி உலகம் கூறுவது அனைத்தும் அவதூறு என்பதை
உணர்ந்து கொண்டேன். என்று சொல்கிறார்.

இஸ்லாத்தில் இணைந்து கொண்ட பின் தன் பெயரை இப்போது அம்னா ஃபாரூக்கி என
மாற்றிக்கொண்டு, இஸ்லாமிய நெறிமுறைகளை பின் பற்றி வாழும் அவரின் கடந்த
காலங்களில் புகைத்தல், மது அருந்தியது, ஆபாசமாக நடித்த காட்சிகளை ஒளிபரப்பி
வேதனை உண்டு பண்ணி வருகின்றனர்.

அத்துடன் அந்த பொண்ணுக்கு இப்போது முஸ்லீம்கள் மீது ஆசை வந்து விட்டதனால்,
முஸ்லீமாக மாறி விட்டதாகவும் எழுதி வருகின்றனர்.

ஒருவர் பெயரளவில் இல்லாமல், இஸ்லாத்தை உண்மையாக ஆராய்ந்து நேசித்தால் அவரிடம்
அல்லாஹ் பெரும் மாற்றத்தை கொண்டு வருவான் என்பதை இப்பெண்மணி மூலாமாக மீண்டும்
நிருபிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

மகனின் வழியில் முருகனின் தந்தை தங்கராஜ் அவர்களும்


மகனின் வழியில் முருகனின் தந்தை தங்கராஜ் அவர்களும்


இஸ்லாத்தை தன வாழ்வியல் ஆக ஏற்றுக் கொண்ட போது .

சென்னை ஆசாத் நகரை சேர்ந்த முருகன் எனும் சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தன்னை முஹம்மத் ஆக மாற்றிக் கொண்ட போது



சென்னை ஆசாத் நகரை சேர்ந்த முருகன் எனும் சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தன்னை முஹம்மத் ஆக மாற்றிக் கொண்ட போது

குமாரகுருவாக இருந்து இன்று 11.11.11 ஜும்மாவிற்க்குப் பின் இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் உமர்


குமாரகுருவாக இருந்து இன்று 11.11.11 ஜும்மாவிற்க்குப் பின் இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் உமர் எனும் சகோதரருக்கு கலிமா சொல்லிக் கொடுத்தமாநில செயலாளர் செங்கிஸ் கான்

திருவல்லிகேணியை சேர்ந்த பார்த்தசாரதி எனும் இளைஞர் முஹம்மது பாஷா எனும் பெயரில் இஸ்லாத்தை ஏற்ற போது


திருவல்லிகேணியை சேர்ந்த பார்த்தசாரதி எனும் இளைஞர் முஹம்மது பாஷா எனும் பெயரில் இஸ்லாத்தை ஏற்ற போது

அல்லாஹ்வின் அளப்பரிய கருணையினால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இறை வேதம் வழங்கும் நிகழ்ச்சியின் மூலமும், அதன் செயல் வீரர்களின் அழைப்புப் பணியின் மூலம் அநேகர் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.


அந்த வகையில் கடந்த வாரம் மூவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியை வெளியிட்டிருந்தோம்.அல்ஹம்து லில்லாஹ்.

இந்த வாரம் நால்வர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். திருவல்லிகேணியை சேர்ந்த பார்த்தசாரதி எனும் இளைஞர் முஹம்மது பாஷா எனும் பெயரில் இஸ்லாத்தை ஏற்ற போது கலிமா சொல்லிக் கொடுக்கும் தலைவர்.எஸ்.எம்.பாக்கர்.

Thursday, November 10, 2011

ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!



ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!

அழைப்பு பணியை தன முழு முதற் பணியாக கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய தாஃவா பணிகளை அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக செய்து கொண்டுள்ளது.இதன் பயனாக கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 21/10/2011 வெள்ளிக்கிழமை ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் நடந்த ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடனமான திருக்கலிமாவை மொழிந்தனர்.இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கை விளக்கத்தை அவர்களுக்கு தலைவர் எஸ்.எம்.பாக்கரும், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.சையத் இக்பாலும் சொல்லிக்கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்

குமரியில் ஏகத்துவ கேபிள் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற கிறுஸ்துவ சகோதரர்


குமரியில் ஏகத்துவ கேபிள் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற கிறுஸ்துவ சகோதரர்

குமரி மாவட்டத்தில் தீன் தொலைகாட்சி என்ற உள்ளுர் கேபில் டிவி சேனல் மூலம் ஏகத்துவ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

தாய் மார்க்கத்தில் மீண்டு வரும் குமரி மக்கள் கடந்த சில வருடங்களா நம்முடைய ஜமாத்தின் பிரசாரம் மூலம் முஸ்லிம்கள் என்றாலே கொடூரமானவர்கள் இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்ற சிந்தனையை போக்கி மனிதனை நேசிகின்ற மார்க்கம் இஸ்லாம் மனித நேயத்தை கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்ற சிந்தனை மக்கள் மத்தியில் உருவாக்கி இன்று இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருகின்றனர். அல்ஹம்துல்லில்லாஹ்.

அதே போன்று தான் குமரி மாவட்டத்திலும் நம் ஜாமத்தின் பிரசாரம் மக்கள் மத்தியில் மாபெரும் மாற்றதை உருவாகி இஸ்லாத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நாள் தோறும் பெருகி வருகின்றது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக இதன் தாக்கம் அதிகமாகியுள்ளது.
குமரியின் தென் பகுதியை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இஸ்லாமிய தொலைகாட்ச்சியான தீன் டிவி தான் இதற்கு காரணம்.

இந்த தொலைகாட்சி கிறஸ்தவர்கள் கணக்கில் அடங்காத டிவி சானல்களை வைத்து மக்களுக்கு பிரசாரம் செய்தாலும் நம்முடைய தீன் டிவி இஸ்லாத்தை அதன் துயவடிவில் எடுத்துரைக்கும் சானல் என்ற வாசகத்தோடு மக்களை சென்று அடைந்து வருகிறது அல்ஹம்துல்லில்லாஹ்.

இது பிறமசயத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மிகப்பெரிய பொக்கிசமாக அமைந்துள்ளது .

இதில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் மற்றும் விவாதங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு உடனே அவர்கள் தீன் டிவி அலுவலகத்தை
தொடர்பு கொண்டு இஸ்லாத்தை நாங்கள் தவறுதலாக நினைத்து வைத்திருந்தோம் உங்கள் டிவி எங்களுக்கு உண்மையை உரைத்தது மட்டும் இல்லாமல் மரணதிற்கு முன்பு நங்கள் இந்த சத்தியத்தை ஏற்று இறைவனிடம் நன்மைஅடைய வேண்டும் என்றும் ஆசைபடுகிறோம் என்று கூறி அதற்குரிய வழிமுறைகளை அல்லது ஆலோசனகளை அவர்கள் கேட்கின்றனர்.

அதே போன்று வட்டி தொழில் செய்த துரை என்ற சகோதரர் இந்த தொலைகாட்சி வட்டியை மட்டும் தவறு என்று அவர்களுக்கு புரியவைக்க வில்லை இந்த இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஆக்கிகொள்வததோடு, தான் செய்த தொழிலைய மாற்றி விட்டு ஹலலானே தொழிலை செய்பவராக ஆக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்

ஆதே போன்று நம்முடைய கிறஸ்தவ விவாதங்களை ஒளிபரப்பியதால் மிரட்டலை சந்தித்தாலும் கொள்கை உறுதியில் தொடர்ந்து ஒளிபரப்பிய பிறகு கிறஸ்தவ மக்கள் நம்மை அணுகி இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் எங்களுக்கு அதுகுறித்த புத்தகம் வேண்டும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டும் என்று கேட்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகள் மூலம் மதுக்கடையில் வேலை பார்க்கும் செந்தில் என்பவர் இஸ்லாத்தை மனதாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சிகள் இன்று மாணவர்களையும் வெகுவாக கவர்ந்திருகிறது கருங்கல் பகுதியை சார்ந்த திருவிதம்கோடு பகுதியில் படிக்கும் மாணவர்களும் நம் அலுவலகத்தை அணுகி மார்க்கம் சம்மந்தமாக புத்தகங்களை பெற்றுசென்றுள்ளர்கள்.

இப்பொது முளகுமூடு பகுதியை சார்ந்த மாணவன் மெல்பின் என்பவர் இந்த தீன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்து விட்டு மாநில தலைமைக்கு கடிதம் எழுதி உடனே நான் இந்த சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்பு கொள்ள அந்த தகவலை தலைமை குமரி மாவாட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க உடனடியாக மாவாட்ட நிர்வாகம் அந்த சகோதரரை தொடர்பு கொண்டு பேசிய பொது அவரும் நம்மை சந்திக்க வர ஆவலாக இருந்து இறுதியில் கடந்த 10.7.2011 அன்று நம்முடைய தக்கலை கிளை அலுவலகத்திற்கு வந்து மாவாட்ட துணை செயலர் பஷீர் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள். பின்னர் நான் இது தான் சத்திய மார்க்கம் என்பதை உணர்துள்ளேன் என்று கூறி சத்திய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் அல்ஹம்துல்லில்லாஹ் .

கிறிஸ்துவர்கள் இந்த மாவட்டத்தில் அதிகமாக வாழ்ந்தாலும் இன்று இஸ்லாத்தின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வம் இந்த இஸ்லாம் தான் சத்திய மார்க்கம் என்று கிறிஸ்துவர்களை நினைக்க வைத்துள்ளது குறிப்பிடதக்கது.

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெஸ்லின்


தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெஸ்லின்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 14-8-2011 அன்று நடைபெற்ற ரமளான் சொற்பொழிவில் கும்பகோணம் நாச்சியார் கோயிலை சேர்ந்த ஜெஸ்லின் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தனது பெயரை முஹம்மது இஸ்மாயில் என்று மாற்றிக்கொன்டர். அல்ஹம்துலில்லாஹ்! கிளைச் செயளாலர் சுலைமான் நிஜாம்தீன் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளக்கியதுடன்
இஸ்லாமிய நூல்களை வழங்கினார்கள்.

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இரண்டு சகோதரர்கள்


கத்தர் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இரண்டு சகோதரர்கள்

கடந்த 24-02-2011 அன்று கத்தர் மர்கசில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது பட்டுகோட்டையை சேர்ந்த கலைவாணன் , தஞ்சை சேர்ந்த நாகராஜ் ஆகிய இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். கலைவாணன் என்ற சகோதரர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் , நாகராஜ் என்ற சகோதரர் தனது பெயரை அப்துல் காதிர் என்றும் மாற்றிக்கொண்டனர்.

அச்சகோதரர்களுக்கு துணை செயலாளர் சாஜஹான் அவர்கள் இஸ்லாத்தை பற்றி விளக்கக் கூறினார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே !

அவ்விருவருக்கும் மர்கஸ் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வழங்கினார்கள்.