Friday, November 18, 2011
பிரான்சு நாட்டில் இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு பதறிப்போன அதிபர் சர்கோசி
உடலை மூடி இருக்கும் நீச்சல் உடைக்கு பிரான்ஸ் நீச்சல் தடாகத்தில் தடை:
பிரான்ஸ் நாட்டில் இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு பதறிப்போன சர்கோசி பெண்கள் இஸ்லாமிய உடை அணிவது பெண்ணடிமைத்தனத்தை காட்டுவதாக கூறினார் அது சர்ச்சையானது. இப்போது முஸ்லிம் பெண்கள் அணியும் `பர்க்கினி’ Burkini நீச்சல் உடை மீது சர்ச்சையை கிளப்பி உள்ளனர் . பர்க்கினி என்பது முஸ்லிம் பெண்கள் முழுவதும் உடலை மறைத்து கொண்டு நீந்துவதற்கு அணியும் நீச்சல் உடை ஆகும். இந்த உடையை அணிந்துகொண்டு ஒரு முஸ்லிம் பெண் கரோல் என்ற இஸ்லாத்தை தழுவிய பிரான்ஸ் பெண் ஒரு நீச்சல் குளத்துக்கு சென்றபோது அங்கு இருந்த ஊழியர் அவர் நுழைவதற்கு தடை விதித்தார் இதற்கான அடிப்படை காரணம் இஸ்லாம் மிக வேகமாக வளரும் கண்டமாக ஐரோப்பாவும் இஸ்லாம் மிக வேகமாக வளரும் நாடு பிரான்சுமாகும்.
பர்கா உடை பிரான்ஸ் நாட்டில் வரவேற்கத்தக்கது அல்ல’ என்று அதிபர் சர்கோசி கூறியதை தொடர்ந்து, அந்த உடைக்கு தடை விதிக்கலாமா? என்பது பற்றி கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் பர்க்கினி’ உடை அணிந்து கொண்டு ஒரு பெண் பாரிஸ் நகரில் உள்ள எமெரய்ன்வில்லே என்ற இடத்தில் உள்ள ஒரு நீச்சல் குளத்துக்கு சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முழுவதும் உடை அணிந்து நீந்தக்கூடாது என்று அனுமதி மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து கரோல் என்ற இஸ்லாத்தை தழுவிய பிரான்ச் பெண் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக கூறி இருக்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment