Saturday, November 26, 2011

இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்


அல்லாஹ்வின் திருபெயரால்
இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்
நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வா அருகே வசிப்பவர் ராமு
இவரது மகன் சகோதரர் மருது பாண்டி இவர் நமது பள்ளியில்
சொல்லபடும் பயான்களை கேட்டும் அதன் விளக்கத்தை தமது
பள்ளி தோழர்களிடமும் கேட்டு தெளிவடைந்து மறுமையின்
பயம் காரணமாக நம் பள்ளிக்கு தொழ வர ஆரம்பித்தார் புது
முகமாக இருக்கும் காரணத்தால் நமது தாயீ அவரை விசாரிக்க
அவர் மறுமையின் பயம் காரணமாக தான் முஸ்லிம் ஆகிவிட்டதாக
சொல்ல அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான விவரங்களை கூறி
நன்றக யோசிக்கும்படியும் கூறி அனுப்பிவைத்தார் அவர் தமது
குடும்பத்தாரிடம் நான் முஸ்லிம் ஆக போகிறேன் என்று கூற
அடி உதை பலநாட்கள் பட்டினி என்று கொடுமை தொடர்ந்த போதிலும்
அவரின் உள்ளம் இறைவன் பக்கம் உறுதியாக நின்றது விளைவு
(மருது பாண்டி) இன்று முஹம்மத் அர்சத்ஆக இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ் ..
அல்லாஹ் யாருக்கு நேர் வழிகாட்டுகிறானோ
அவரை வழிகெடுப்பவன்( யாரும்) இல்லை 39 /37
பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு
மறுமையை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல்
மனோ இச்சையை பின்பற்றி கொண்டிருப்பவர்கள் மத்தியில்
முஹம்மத் அர்சத்திற்கு மறுமை வாழ்வு வடிவில் இஸ்லாம்
அவரை அனைத்துகொண்டது அவரையும் நம்மையும்
முஸ்லிம்களாக வாழ செய்து முஸ்லிம்களாக மரணிக்க செய்ய
அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்
நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகிற விதத்தில்
அஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள் 3 /102

No comments:

Post a Comment