Thursday, November 10, 2011
துபையில் இஸ்லாத்தை சுந்தர்
துபையில் இஸ்லாத்தை சுந்தர்
கடந்த 04.02.2011 வெள்ளிக்கிழமை துபை நாத்அல்சப்ஹா என்ற பகுதியில் வேலை செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோ. சுந்தர் என்பவர் தன்னை தூய இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டு தன் பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!
அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி கடந்த ஏழு வருடமாக தெரிந்திருந்தும் சரியாக வழிகாட்ட யாரும் இல்லாமல் இருந்திருந்தார் . இதை அறிந்த துபாய் தஃவா -வில் வேலை செய்கின்ற ஒரு சகோதரர் நம் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டார்கள்.
உடனடியாக நமது ஜமாஅத் நிர்வாகிகள் அங்கு சென்று அவருக்கு ஒரு கடவுள் கோட்பாடுப் பற்றிய விளக்கத்தை அளித்தார்கள். மண்டல துணை தலைவர் சகோ. உமர் இஸ்லாமிய கொள்கைகளை விளக்கினார்கள்.
மேலும், அவருக்கு தமிழ் குர்ஆன் தமிழாக்கம், சி.டி. மற்றும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மண்டலச் செயலாளர் சகோ. அஷ்ரப் அவர்கள் உடனிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment