Friday, November 11, 2011

நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை பூஜாலாமா, இஸ்லாத்தை


28 வயதுடைய
நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை பூஜாலாமா, இஸ்லாத்தை படித்த பிறகு அதில்
ஈர்க்கப்பட்டு, இதுநாள் வரை தான் செய்ததெல்லாம் தவறு என்று உணர்ந்து
நடிப்பதையும்,மாடல் செய்வதையும்,மியூசிக் ஆல்பம் தயாரித்து வெளியிடுவதையும்
விட்டுவிடார். இஸ்லாத்தை ஏற்ற அவர் இப்போது உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா
அணிந்து வெளியே வருகிறார்.


புத்த மதத்தைச் சேர்ந்த, மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அப்பெண்மனி
தனது கடந்த கால வாழ்வு பற்றி..... நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன். தற்கொலை
செய்து கொள்ளவும் முயன்றேன். இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. நான்
இப்பொழுது ஆபாசம், மது, புகை, அசுத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும்
விட்டுவிட்டேன். இஸ்லாத்தை பற்றி உலகம் கூறுவது அனைத்தும் அவதூறு என்பதை
உணர்ந்து கொண்டேன். என்று சொல்கிறார்.

இஸ்லாத்தில் இணைந்து கொண்ட பின் தன் பெயரை இப்போது அம்னா ஃபாரூக்கி என
மாற்றிக்கொண்டு, இஸ்லாமிய நெறிமுறைகளை பின் பற்றி வாழும் அவரின் கடந்த
காலங்களில் புகைத்தல், மது அருந்தியது, ஆபாசமாக நடித்த காட்சிகளை ஒளிபரப்பி
வேதனை உண்டு பண்ணி வருகின்றனர்.

அத்துடன் அந்த பொண்ணுக்கு இப்போது முஸ்லீம்கள் மீது ஆசை வந்து விட்டதனால்,
முஸ்லீமாக மாறி விட்டதாகவும் எழுதி வருகின்றனர்.

ஒருவர் பெயரளவில் இல்லாமல், இஸ்லாத்தை உண்மையாக ஆராய்ந்து நேசித்தால் அவரிடம்
அல்லாஹ் பெரும் மாற்றத்தை கொண்டு வருவான் என்பதை இப்பெண்மணி மூலாமாக மீண்டும்
நிருபிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

No comments:

Post a Comment