Monday, January 9, 2012

இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்



அல்லாஹுவின் திருப்பெயரால்
கீழக்கரை அருகில் புள்ளந்தை என்ற ஊரில் வசிக்கும் ஒரே குடுபத்தை சேர்ந்த 3 நபர்கள் இஸ்லாத்தை ஏற்க முன்வந்தனர் அவர்களுக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது அவர்களும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே நபி (ஸல்) அவர் தூதர் என்றும் கலிமாவை மொழிந்து இத்தூய இஸ்லாத்தை ஏற்ற்றார்
அல்லாஹ் அக்பர்.....

அவர்களின் தாய் பாண்டியம்மாள் "ஜென்னத்" என்றும் அவருடைய மகள் பொது பொண்ணு "அனீஸ் பாத்திமா" என்றும் அவருடைய மகன் வசந்த் "முகம்மது பாசித்" என்றும் பெயர் சூட்டப்பட்டார்கள் அவர்களுக்கு திரு-குரான்,இஸ்லாமிய அடிப்படை சட்டங்கள் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லா............

வலங்கைமானை சேர்ந்த சுபாஷ் இஸ்லாத்தை ஏற்றார் – ராஜகிரி – பண்டாரவாடை கிளை!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் கடந்த 27.09.11 செவ்வாய்க்கிழமை அன்று வலங்கைமான் தாலுக்கா மட்டயாந்திடலை சார்ந்த சுபாஷ் சந்திரன் என்பவர் இஸ்லாத்தை தன வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை அஸ்ரப் அலி என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு மாவட்டம் சார்பாக அபிடவிட் போடப்பட்டது.

Wednesday, December 21, 2011

கோவை செல்வபுரம் தெற்கில் இஸ்லாத்தை ஏற்ற ரவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் 28.11.2011 அன்று ரவி என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அவரை தாவா சென்டருக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் இஸ்லாத்தை ஏற்ற குமார்


தமிழ்நாடு ஜமாஅத் கோவை கோவை மாவட்டத்தில் குமார் என்ற சகோதரர் 30.11.2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்றது அவர் வீட்டுக்கு அறிவிக்காத காரணத்தால் மவ்லவி அன்சர் அவர்கள் இஸ்லாத்தை குறித்து அவருக்கு தினமும் ஒரு மணி நேரம் வகுப்பெடுக்கிறார்.

புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்
14-12-11 அன்று துளசி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக
ஏற்றுக்கொண்டார். அவருக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம்,
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, தொழுகைச் சட்டங்கள், மற்றும் இஸ்லாமிய
அடிப்படை பற்றி சகோதரர் பி.ஜே அவர்கள் உரையாற்றிய ஆடியோ, வீடியோ
கேசட்டுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

Saturday, December 3, 2011

ஒரு பிராமின் ஏன் முஸ்லிமாக மாறினேன் என அவரே சொல்லும் வீடியோ .


ஒரு பிராமின் ஏன் முஸ்லிமாக மாறினேன் என அவரே சொல்லும் வீடியோ .

http://www.islamreligion.com/videos/2519/
நன்றி:- http://peacetrain1.blogspot.com/