Thursday, March 1, 2012

மதுரையில் நடை பெற்ற இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்


மதுரையில் நடை பெற்ற இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்

மாமறை குரான் மக்களை அழைக்கிறது எனும் பெயரில் தமிழகத்தின் பல நகரங்களில் நடைபெற்ற மாற்று மத சகோதரர்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லும் இனிய மார்க்கம் இஸ்லாம் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று மதுரை முனிச்சாலை கிளை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்மாயில் புரம் மண்டபத்தில் நடை பெற்றது .இதில் ஏராளமான் முஸ்லிமல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் முகமாக கேள்விகள் கேட்டனர். ஆத்திகர்கள், நாத்திகர்கள் , இந்துக்கள் கிறிஸ்தவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு தலைவர் எஸ்..எம்.பாக்கர் மற்றும் மாநில பேச்சாளர் முஹம்மத் மைதீன் ஆகியோர் அழகிய முறையில் பதில் அளித்தனர்.முன்னதாக இந்நிகழ்ச்சியை துணைத்தலைவர் முஹம்மத முனீர் அவர்கள் துவங்கி வைத்தார் . மாவட்ட கிளை நிர்வாகிகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட முஸ்லிமல்லாத சகோதரர்கள் அனைவருக்கும் திரு மறை குரானின் தமிழாக்கம் வழங்கப் பட்டது. இதில் கலந்து கொண்ட ஒரு சகோதரர் இஸ்லாத்தை ஏற்றார்.அல்ஹம்து லில்லாஹ்.

No comments:

Post a Comment